News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த<> இணையதளத்தில்<<>> வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

Similar News

News October 14, 2025

ராணிப்பேட்டை மாவட்டதில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ம் தேதியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.முகாமில் 8ம் வகுப்பு முதல் 10ம்,12ம் வகுப்பு,பட்டப்படிப்பு,ஐடிஐ,டிப்ளமோ நர்சிங் மற்றும் பிஇ முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 13, 2025

636 மனுக்கள் ஆட்சியரிடம் குவிந்தது மக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.13 ம் தேதி மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல், மின் இணைப்பு, குடும்ப அட்டை என மொத்தம் 636 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 13, 2025

புதிய பேருந்துகள் தொடக்க விழா அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்பு

image

இன்று (அக்.13) இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தாழ்தள புறநகர் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!