News October 26, 2024

இந்திய அணி மோசமான தோல்வி

image

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்துள்ளது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஷ்வால் 77, ஜடேஜா 42 என ஓரளவு சிறப்பான ரன்களை எடுத்தனர். நியூசி., இரு இன்னிங்ஸ்களில் முறையே 259 & 255 ரன்களும், இந்தியா 156 & 245 ரன்களும் எடுத்தன.

Similar News

News July 9, 2025

Drug Test: இந்தியாவின் Ex. உலக சாம்பியனுக்கு ஒரு வருடம் தடை!

image

இந்தியா மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா(22) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 17 முதல் நடைபெறவுள்ள Ranking Series tournament, & செப்டம்பரில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2023-ல் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை ரித்திகா வென்றிருந்தார்.

News July 9, 2025

அரசியல் சுற்றுப்பயணம் செல்லும் ஓபிஎஸ்!

image

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஆனால், பாஜகவுடன் அதிமுக மீண்டும் இணைந்தபிறகு ஓபிஎஸ் கண்டுகொள்ளப்படவில்லை. குறிப்பாக, சந்திப்பதற்கு அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை, முருகன் மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அதேநேரம், நயினார் மட்டும் ஓபிஎஸ் NDA-ல் உள்ளதாக கூறி வருகிறார். எனவே, தனது இருப்பை காட்டிக்கொள்ள பயணத்தை அறிவித்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

News July 9, 2025

தனுஷுடன் இணைந்த ரஜினி பட நடிகர்

image

தனுஷின் லைன்-அப்களில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவும் உள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், வீர தீர சூரனில் மிரட்டிய சுராஜ் வில்லனாக இதில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இட்லி கடை’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

error: Content is protected !!