News November 3, 2025
இந்திய அணியை பாராட்டிய அரசியல் தலைவர்கள்

இந்திய மகளிர் அணியின் வெற்றி எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காண வைக்கும் என்று ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். மகளிர் அணியின் தைரியம், மன உறுதி ஆகியவை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இதே போல மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ், ரேகா குப்தா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 3, 2025
போனை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டுறீங்களா?

குழந்தைகளுக்கு போனில் கார்ட்டூனை காட்டியபடி, சோறு ஊட்டும் பழக்கம் பல வீடுகளிலும் இருக்கிறது. ஆனால், ‘Screen Feeding’ எனப்படும் இப்பழக்கம் மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இம்முறையில் வளரும் குழந்தைகளுக்கு பேச்சு வருவது தாமதமாவது, கவனமின்மை, பெற்றோருடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம் என எச்சரிக்கப்படுகிறது. இனிமே கவனமா இருங்க. இதை அனைவருக்கும் பகிருங்க.
News November 3, 2025
CA தேர்வு முடிவு வெளியானது

சார்ட்டர்ட் அக்கவுண்ட் (CA)-2025 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த CA படிப்பின் பவுண்டேஷன், இண்டர்மீடியட், மற்றும் பைனல் தேர்வுகளின் முடிவுகளை ICAI-யின் இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். https://icai.nic.in/caresult/ என்ற இணைய முகவரிக்கு சென்று மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர், ரெஜிஸ்டர் நம்பர் இரண்டையும் எண்டர் செய்து தேர்வு முடிவை பார்க்கலாம். SHARE IT
News November 3, 2025
SIR குறித்து அச்சப்பட தேவையில்லை: ECI

SIR மீது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று ECI தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்களை நீக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, எதிர்பார்த்ததை விட SIR பணிகள் சிறப்பாக நடைபெறும் என ECI குறிப்பிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து வழக்குகளும் நவ.13-ல் விசாரிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


