News December 30, 2025
இந்திய அணியின் பேட்டிங் கோச்சாகும் யுவராஜ் சிங்?

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கை நியமிக்கலாம் என Ex இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோரின் மெண்டராக இருக்கும் அவர், பயிற்சியாளாரானால் அது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் எனவும் அவர் கூறினார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் உள்ளார். யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராக சரியான தேர்வா?
Similar News
News February 4, 2026
ஹிந்தி திணிப்பு முயற்சிகளை கைவிடுக: தங்கம் தென்னரசு

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்கு தள்ளி ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து X பதிவில், மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தெற்கு ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக ஹிந்தி திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழே முன்னவள், மூத்தவள், முதன்மையானவள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 4, 2026
பட்ஜெட் பற்றி தவெகவிடம் கேட்கக் கூடாது: KAS

தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற விஜய், பட்ஜெட் பற்றி வாய் திறக்காதது சர்ச்சையானது. இந்நிலையில் அதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பட்ஜெட் பற்றி தவெகவின் கருத்தை நீங்கள் கேட்கக் கூடாது; புது இயக்கமான தவெக, TN-ல் ஆட்சியை பிடிக்க வேண்டியுள்ளதால், அதன்பின்தான் அதுகுறித்து கருத்து கூற முடியும் என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
News February 4, 2026
SHOCKING: சிறுமியின் வாயில் வெடித்த சாக்லேட்

ராஜஸ்தானில் சாக்லேட் என நினைத்து வெடிபொருளை சாப்பிட்ட 3 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடையில் வாங்கிய சாக்லேட் சாப்பிட்டபோது, அது வாயிலேயே வெடித்து சிதறியது. இதில் வாய் & தாடை பிளந்து காயமடைந்த சிறுமி ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். கடைக்காரர் சாக்லேட் வடிவிலான வெடிபொருளை சிறுமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


