News February 26, 2026
இந்திய அணியின் பிளேயிங் 11.. இது நல்லாருக்கே

SA-வுக்கு எதிராக படுதோல்வி அடைந்ததால் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க <<19240753>>இன்றைய போட்டியில்<<>> இந்தியா வெற்றிபெறுவது அவசியமாகும். கடந்த போட்டியில் விளையாடாத அக்ஷர் படேல் அணிக்கு திரும்பவுள்ளாராம். BCCI வட்டார தகவலின்படி இன்றைய பிளேயிங் 11 விவரம்: அபிஷேக், இஷான், சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் (C), ஹர்திக், துபே, அக்ஷர் படேல், வருண், பும்ரா, அர்ஷ்தீப்.. இந்த பிளேயிங் 11 வெல்லுமா? கமெண்ட் பண்ணுங்க
Similar News
News February 28, 2026
விஜய்யும் ஒவ்வொரு மாதத்தின் 27-ம் தேதி!

கடந்த சில மாதங்களின் 27-ம் தேதி விஜய்க்கு முக்கியமான நாள்களாக மாறியுள்ளது *செப். 27: கரூர் சம்பவம் *அக். 27: கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்தித்தார் *நவ. 27: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் *டிச. 27: ‘ஜன நாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் *ஜன. 27: ‘ஜன நாயகன்’ விவகாரம் விசாரணைக்கு வந்தது *பிப். 27: விவாகரத்து. அடுத்து வரவுள்ள 27-ம் தேதிகள் என்ன சம்பவங்களை செய்யவுள்ளதோ?
News February 28, 2026
BREAKING: ரூ.10,000 ஆக உயர்த்தி ஸ்டாலின் அறிவித்தார்

கோயில் பூசாரிகள் மரணமடைந்தால், அவர்களின் இறுதிச் சடங்கிற்காக வழங்கப்படும் நிதியுதவியை ₹5,000-ல் இருந்து ₹10,000-ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், கிராம கோயில் பூசாரிகள் உயிரிழந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகையாக ₹1 லட்சம் தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஒரு பூசாரி உயிரிழந்தால் அவரது வாரிசுக்கு ₹50,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
News February 28, 2026
அதிமுகவில் இணைந்த அடுத்த OPS ஆதரவாளர்

அதிமுகவே கதி என இருந்த OPS திடீரென திமுகவில் தஞ்சம் அடைந்ததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் OPS அணியில் இருந்த முக்கிய ஆதரவாளர்களே தற்போது அடுத்தடுத்து தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதன்படி, நேற்று வெல்லமண்டி நடராஜன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் அதிமுகவில் இணைந்து OPS-க்கு ஷாக் கொடுத்துள்ளார்.


