News December 28, 2025
இந்திய அணியின் கேப்டனான வைபவ் சூர்யவன்ஷி!

U19 ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கிய இளம் சிங்கம் வைபவ் சூர்யவன்ஷிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. SA-க்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட U19 ஒருநாள் தொடரில், 14 வயதான சூர்யவன்ஷி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் துணை கேப்டன் விஹான் மல்ஹோத்ரா, காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வரும் ஜன.3-ம் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது.
Similar News
News December 30, 2025
2025-ல் ஹிட் அடித்த சிறு பட்ஜெட் படங்கள்

தமிழ் சினிமாவில் இந்தாண்டு ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பெரும் ஹிட் அடித்தன. அதில், சில படங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வசூலையும் வாரி குவித்தன. அவை எந்தெந்த படங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், உங்களுக்கு தெரிந்த படங்கள் வேறு ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 30, 2025
வாழ்க்கையை மேம்படுத்தும் பழக்கங்கள்

வாழ்க்கையை மேம்படுத்துவது ஒரே நாளில் நடந்துவிடாது. தினசரி ஏற்படும் சிறிய, நிலையான மாற்றங்களின் பலனாக வாழ்க்கை மேம்படுகிறது. தொடர்ச்சியாக நாம் கடைபிடிக்கும் பழக்கம், வழக்கமாக மாறும்போது வாழ்க்கையின் அற்புதம் நிகழும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?

தவெக கூட்டணியில் காங்., இடம்பெறுமா என்ற கேள்வி அண்மையில் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுகவுடனான 22 ஆண்டு கால கூட்டணியை முறிக்க காங்., தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காங்.,-க்கு 50 தொகுதிகளை ஒதுக்க தவெக தயார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் 41 சீட்கள் பெற வேண்டும் என காங்., உறுதியாக உள்ளது. இதற்கு திமுக உடன்படாவிட்டால் மாற்றம் நிகழலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


