News January 31, 2026

இந்திய அணிக்கு அஸ்வின் வேண்டுகோள்!

image

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 ஸ்பின்னர்களை களமிறக்க வேண்டாம் என Ex இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணி ஒரு முக்கிய ஸ்பின்னர் & ஒரு ஸ்பின் வீசும் ஆல்-ரவுண்டருடன் விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மா பேட்டிங்குடன் தனது பந்துவீச்சிலும் கவனம் செலுத்தினால், அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக வருவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

‘அப்பா நாங்க 3 பேரும் சாகப் போகிறோம்’

image

குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காவிட்டால் பெற்றோருக்கு ஏற்படும் பேரிழப்பை உ.பி.,யின் காசியாபாத்தில் நிகழ்ந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொரோனா காலத்தில் செல்போனில் கொரியன் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது பிள்ளைகளை தந்தை சேதன் குமார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த பாக்கி(12), பிராச்சி(14), விஷிகா(16) மூவரும், கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News February 4, 2026

சசிகலாவை மீண்டும் சேர்க்க மாட்டோம்: EPS

image

EPS தலைமையை ஏற்று, NDA-வில் இணைந்த TTV, சசிகலாவும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பார் என கூறியிருந்தார். இதனால், சசிகலா விஷயத்தில் EPS என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, அவர்களெல்லாம் துரத்தி விடப்பட்டவர்கள்; சசிகலா குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி யூகங்களுக்கு EPS முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News February 4, 2026

இணையத்தை ஆக்கிரமித்த ’முட்டை’ போஸ்டர்!

image

தென் மாவட்டங்களில் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. கடந்த பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் வழக்கம்போல் TN ஏமாற்றப்பட்டதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் BJP-ADMK அரசு 2026 பட்ஜெட்டில் TN-க்கு ஒதுக்கிய நிதி என குறிப்பிட்டு, பெரிய முட்டை படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

error: Content is protected !!