News December 13, 2025
இந்தியா மீதான டிரம்ப்பின் வரியை நீக்க தீர்மானம்

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் விதித்த 50% வரியை முடிவுக்கு கொண்டுவர, US பிரதிநிதிகள் சபையின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வரியை சட்டவிரோதமானது எனக்கூறிய டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி(இந்திய வம்சாவளி), இதனால் USA தொழிலாளர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். வரியை நீக்கினால் இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெறும் எனவும் கூறினர்.
Similar News
News March 9, 2026
எதற்கும் அஞ்சாத அணி: கம்பீர்

எதற்கும் அஞ்சாத அணியை உருவாக்கி உள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். வெற்றிக்கு பின் பேசிய அவர், மற்றவர்கள் உருவாக்கியதை அப்படியே பெற்றுக்கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. புதிதாக ஒன்றை உருவாக்குவதையே நான் நம்புகிறேன். பயமற்ற அணுகுமுறை தோல்வியின் அழுத்தத்தை குறைத்து, அதிரடியாக ரன் குவிக்கும், எதிரணிகளை ஆட்டமிழக்க செய்யும் ஆக்ரோஷமான பாணியை உருவாக்கும் என்றார்.
News March 9, 2026
மார்ச் 11-ல் பொதுத்தேர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. *பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருக்கக் கூடாது. SHARE IT
News March 9, 2026
தேர்தல் பணி: விசாரணைக்கு விலக்கு கேட்ட விஜய்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நாளை டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நாளை தவெக வேட்பாளர்களின் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வேண்டி விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


