News November 3, 2025
இந்தியா சாம்பியன்.. வரலாற்று தருணங்கள் PHOTOS

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய மகளிர் அணி சாம்பியனாக உருவெடுத்த வரலாற்று தருணங்களை போட்டோக்களாக SWIPE செய்து பார்க்கவும்.
Similar News
News November 3, 2025
கடலூர்: துணிக்கடையில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

கடந்த 17.10.2025 அன்று கடலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளி துணி எடுக்க வந்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் ரூ.10,500-ஐ துணிக்கடையில் தவறவிட்டுள்ளார். இதையடுத்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், புதுநகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு பணத்தை கண்டுபிடித்து நேற்று அனிதாவிடம் ஒப்படைத்தனர்.
News November 3, 2025
டெல்டாவில் தனி கவனம் செலுத்தும் EPS

2021-ல் கொங்குவில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக, டெல்டா, தென் தமிழகத்தில் கோட்டை விட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்ததால், 2026-ல் தென்மாவட்டங்களில் கனிசமான வாக்குகளை பெறலாம் என நம்பும் EPS , நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, பூத் வாரியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்டப் பொறுப்பாளர்களுடன் EPS ஆலோசித்துள்ளார்.
News November 3, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,350-க்கும், சவரன் ₹90,800-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏற்றம், இறக்கம் கண்டு வந்த தங்கம், இந்த வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய மாற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18183589>>பங்குச்சந்தைகள் தொடர்ந்து<<>> சரிந்து வருவதால் இன்று மாலையிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


