News August 25, 2025
இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு நேரில் ஆதரவு

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நேற்று மாலை சென்னையில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி நேரில் ஆதரவு தெரிவித்தார்.
Similar News
News August 25, 2025
பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்.01- ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் 18 முதல் 48 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள 99443- 92870 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
News August 25, 2025
சேலத்தில் நாளை எங்கெல்லாம் முகாம் தெரியுமா?

சேலம் ஆகஸ்ட் 26 நாளை உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி மண்டலம் குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ▶️பாப்பம்பாடி சுய உதவி குழு கட்டிடம் (பாப்பம்பாடி) ▶️எடப்பாடி துரைசாமி ஜெயமணி திருமண மண்டபம் ▶️ தெடாவூர் மேலவீதி சமுதாயக்கூடம் சடாவூர் கொளத்தூர் சமுதாய நலக்கூடம் கருங்கல்லூர்▶️ ஆத்தூர் ராஜேஸ்வரி திருமண மண்டபம் (தென்னங்குடிபாளையம்) ஷேர் பண்ணுங்க!
News August 25, 2025
கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அரசின் நல உதவிகளை சலுகைகளைப் பெற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் மனு கொடுக்க வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று மனுக்களை பெற்றார். மேலும் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.