News September 12, 2025
இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்திய கிருஷ்ணகிரி இளைஞர்

கணபதி கிருஷ்ணன் ஒரு இந்திய தடகள வீரர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கோன் கவுண்டனூரை சேர்ந்தவர். இவர் பந்தய நடை (Racewalking) போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவிற்காகப் பங்கேற்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 12, 2025
கிருஷ்ணகிரியில் தொடர் உயிரிழப்புகள்

கிருஷ்ணகிரி ஓசூரில், தனியார் நிறுவன ஊழியர் துஷார் துபி (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். மற்றொரு விபத்தில், போச்சம்பள்ளியை சேர்ந்த திருவேங்கடம் (70) என்ற தொழிலாளி, பைக் மோதியதில் உயிரிழந்தார். அதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில், சந்தோஷ் (16) என்ற சிறுவன் பிக்கப் வேன் மோதி பலியானார். கவனமுடன் வாகனத்தை இயக்க போலீசார் அறிவுறுத்தினர்.
News September 12, 2025
கிருஷ்ணகிரி: 8ஆம் வகுப்பு போதும்! நல்ல சம்பளத்தில் அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100. விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இந்த <
News September 12, 2025
கிருஷ்ணகிரியில் நூதன திருட்டு! மக்களே உஷார்…

கிருஷ்ணகிரி பில்லனக்குப்பத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செந்தில்குமார் (40), தனது செல்போனுக்கு வந்த அழைப்பின் மூலம் ஓடிபி எண்ணைக் கூறி ரூ.5.45 லட்சத்தை இழந்தார். சிம் கார்டு காலாவதி ஆகிவிட்டதாகக் கூறிப் பேசிய மர்ம நபர், ஓடிபி எண்ணைக் கேட்டதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க!