News November 23, 2025
இந்தியாவுடன் கூட்டமைப்பை உருவாக்கிய ஆஸி, கனடா

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கூட்டமைப்பை (ACITI) உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், 3 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த கூட்டமைப்பு வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதிலும் இணைந்து செயலாற்ற உள்ளனர்
Similar News
News February 13, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களே, ரெடியா இருங்க!
News February 13, 2026
பெண்களே, இனி இப்படி Dress பண்ணுங்க!

பெண்களே, எப்போதும் Boring-ஆன முறையில் டிரெஸ் பண்றீங்களா? ஆடைகளை வைத்தும் உங்களை மற்றவர்கள் எடை போடுவார்கள். ஆபிசுக்கு இந்த நிறங்களில், இந்த மாதிரியான ஆடைகளை அணிந்து சென்றால் உங்கள் மீதான மதிப்பு உயரலாம். மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எப்படி பட்ட ஆடைகளை அணியலாம் என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு இதை SHARE செய்யுங்கள்.
News February 13, 2026
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு புதிய கேப்டன்.. ஜடேஜா இல்லை

RR அணியின் புதிய கேப்டனாக 24 வயது ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். சாம்சன் டிரேட் மூலம் CSK-வில் இணைந்ததையடுத்து, கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பராக் தேர்வாகியுள்ளார். வார்னே, டிராவிட் வரிசையில் பராக் RR அணியின் 7-வது கேப்டன் ஆவார். உள்ளூர் போட்டிகளில் அசாமை வழிநடத்திய அனுபவம் பராகிற்கு உண்டு. ஜடேஜா, ஜெய்ஸ்வாலை கேப்டனாக நியமித்து இருக்கலாமா? கமெண்ட் பண்ணுங்க


