News January 21, 2026
இந்தியாவுடன் ஒப்பந்தம்.. EU ஆணைய தலைவர் பெருமிதம்

<<18865933>>இந்தியா, ஐரோப்பிய யூனியன் <<>>இடையே FTA ஜன.27-ல் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், இது 200 கோடி மக்களை கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் எனவும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் கூறியுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தமானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்கு சமம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 25, 2026
அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்

சென்னை & டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு, தி.மலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னடலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BE ALERT.
News January 25, 2026
பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் யார் யார்?

நாட்டின் மிக உயரிய விருதாக <<18949906>>பாரத ரத்னா<<>> கருதப்படுகிறது. தத்தமது துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு இந்த உயரிய விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1954-ம் ஆண்டு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை, TN-ஐ சேர்ந்த மூவர் பெற்றனர். இந்தியாவில் இதுவரை 49 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் TN-ஐ சேர்ந்தவர்கள். அவர்கள் யார் என்பதை வலப்பக்கம் Swipe செய்து பார்க்கலாம்.
News January 25, 2026
ஸ்டாலினுக்கு நெருக்கடி… திமுகவில் புதிய சிக்கல்!

தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் பலரும் தங்கள் ஏரியாவில் பிரபலமானவர்களை திமுகவில் இணைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று வருகின்றனர். இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒருபுறம் பாதகமாக மாறியுள்ளது. தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.


