News December 25, 2025

இந்தியாவுடன் அமைதி.. PAK-க்கு ஆயுதம்: சீனாவின் ராஜதந்திரம்

image

எல்லையில் பதற்றத்தை குறைத்து, இந்தியா உடனான உறவை மேம்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக US ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளையில், FC-31, JF-17 போர் விமானங்கள் மற்றும் பிற நவீன விமானங்களை வழங்கி பாகிஸ்தானுடன் ராணுவ உறவை மேம்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளதாம். இருப்பினும், கடந்த கால கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து சீனாவுடன் எச்சரிக்கையுடன் உறவை பேண இந்தியா நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

சதத்தால் மிரட்டிய கேப்டன் ருதுராஜ்

image

விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிர அணியை சரிவில் இருந்து கேப்டன் ருதுராஜ் மீட்டெடுத்தார். 50 ரன்களுக்கு 3 விக்கெட்டை அந்த அணி இழந்த நிலையில், களம்புகுந்த ருதுராஜ் உத்தரகாண்ட்டின் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். 113 பந்துகளில் 124 குவித்து அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் 50 ஓவர்களில் மகாராஷ்டிரா 331 ரன்களை குவித்தது.

News December 31, 2025

பிறப்பு விகிதத்தில் இந்தியா சாதனை!

image

2025-ன் உலகளாவிய பிறப்பு விகித புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2.31 கோடி பிறப்புகளுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2025-ல் உலகெங்கும் தினமும் பிறந்த 6 குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தை! சீனாவை (8.7 மில்லியன்) பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த சாதனை படைத்துள்ளது. உலகில் மொத்தமாக 13.23 கோடி குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இதில் பாதியளவு பேர் ஆசிய கண்டத்தில் தான் பிறந்துள்ளனர்.

News December 31, 2025

BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை ₹960 குறைந்தது

image

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தாறுமாறாக குறைந்துள்ளது. காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 குறைந்த நிலையில், மாலையில் ₹560 குறைந்தது. இன்று மட்டும் ₹960 குறைந்ததால், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹99,840-க்கும், கிராமுக்கு ₹12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!