News September 3, 2025
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் சிங்கப்பூர் PM

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் 3 நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். இந்தியா, சிங்கப்பூர் இடையேயான தூதரக உறவின் 60-ம் ஆண்டு நிறைவையொட்டி வோங் இந்தியா வந்துள்ளார். PM மோடியை சந்திக்க உள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து, விண்வெளி உள்பட 5 துறைகளில் ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளார். முன்னதாக FM நிர்மலா சீதாராமனை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Similar News
News September 4, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மீலாது நபியை முன்னிட்டு, நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை (இன்று இரவு 10 மணி முதல் 6-ம் தேதி மதியம் 12 மணி வரை) மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
நாளை காத்திருக்கும் கோலிவுட் ட்ரீட்!

✦மதராஸி: SK-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவானதால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது.
✦Ghaati: ‘வானம்’ கிரிஷ் இயக்கத்தில், அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகான, கம்பேக் படம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த படங்களுடன் வெற்றிமாறன் தயாரித்த ‘Bad Girl’, KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’, ‘Conjuring Last Rites’ ஆகிய படங்களும் ரிலீசாகின்றன. நீங்க முதலில் எந்த படம் பாக்க போறீங்க?
News September 4, 2025
ED விசாரணை வளையத்தில் ஷிகர் தவான்

சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. ஏதேனும் அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தின்பேரில் ED விசாரிக்க உள்ளது. சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் திரை நட்சத்திரங்களான ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை கொடுத்துள்ளனர்.