News January 11, 2026

இந்தியாவுக்கு பின்னடைவு.. பண்ட் விடுவிப்பு?

image

NZ-க்கு எதிரான ODI தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பயிற்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் நடந்த SL-க்கு எதிரான ODI தொடரில் விளையாடினார். இடைப்பட்ட காலத்தில் அணியில் இடம்பெற்றாலும், Playing 11-ல் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போதும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.

Similar News

News January 29, 2026

ஆதாரில் ஈசியாக செல்போன் எண், முகவரியை மாற்றலாம்

image

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மையத்திற்குதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், UIDAI அறிமுகப்படுத்தியுள்ள ‘ஆதார் App’ மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும், போன் நம்பர் மட்டுமின்றி, ஆதாரில் அனைத்து மாற்றங்களையும் எளிதில் மேற்கொள்ளலாம். App-ஐ பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும். எப்படி எளிதில் ரெஜிஸ்டர் செய்வது என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்யுங்க.

News January 29, 2026

துணை முதல்வர் காலமானார்.. அதிர்ச்சி தகவல்!

image

விமான விபத்தில் மகாராஷ்டிரா DCM அஜித் பவார் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், மோசமான வானிலையே இந்த விபத்திற்கு காரணம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார். முதல்முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போது, ஓடுதளம் தெளிவாக தெரியாததால் பைலட் விமானத்தை மேலே உயர்த்தியுள்ளார். 2-வது முறை தரையிறங்க முயன்ற போதே, விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News January 29, 2026

USA – க்கு படையெடுக்கும் இந்திய நிறுவனங்கள்

image

இந்தியாவிலிருந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் அமெரிக்காவுக்கு படையெடுத்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வாடிக்கையாளர்கள், விரைவான முதலீடு கிடைக்க வாய்ப்பு, ஏஐ-க்கு உகந்த சூழல் ஆகியவை இந்நிறுவனங்கள் US பக்கம் செல்ல வழிவகுத்துள்ளன. இந்நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரையறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

error: Content is protected !!