News December 15, 2025
இந்தியாவுக்கு பஹல்காம்.. ஆஸி.,க்கு போண்டி

சந்தோஷத்தை தந்த சுற்றுலா தலங்களான இந்தியாவின் <<16186680>>பஹல்காமும்<<>>, ஆஸி.,-யின் சிட்னி <<18568504>>போண்டி கடற்கரையும்<<>> பயங்கரவாதத்தின் கொடூரத்தால் துயரத்தின் தடங்களாக மாறியுள்ளன. இரு இடங்களிலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டே தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பஹல்காமில் 26 உயிர்களும், சிட்னியில் 15 உயிர்களும் பறிபோன நிலையில், இரண்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான பொதுமக்களே. So sad!
Similar News
News April 11, 2026
அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்

கவரப்பேட்டையில் நாளை மறுநாள் நடக்க இருந்த விஜய் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதியளித்த நிலையில், இன்று நடைபெறவிருந்த கடலூர் பிரசாரத்தை ரத்து செய்த நிலையில், நாளை மறுநாள் பிரசாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. அதேநேரம், வரும் 19-ம் தேதி கவரப்பேட்டையில் விஜய் பிரசாரம் நடக்கும் என தவெகவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News April 11, 2026
வெட்கப்படுகிறோம், வேதனைப் படுகிறோம்: ஸ்டாலின்

விரக்தியின் உச்சத்தில் இருக்கும் EPS-ன் பேச்சுகளை பற்றி கவலைப்படவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவினர் டெல்லிக்கு குத்தகைக்கு போய்விட்டார்கள் என விமர்சித்த அவர், திராவிட கட்சிகள் இப்படி போனதற்கு வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம் என்றார். இப்போது இருக்கும் மக்களின் எழுச்சியை பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 11, 2026
சுப்புவாக மாறிய கயாது லோஹர்.. First Look❤️

நானியின் “தி பாரடைஸ்” படத்தில், கயாது லோஹர் ‘சுப்பு’ என்ற கேரக்டரில் நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாளையொட்டி வெளியான புதிய போஸ்டரில், கிராமத்து பின்னணியில் சைக்கிளில் வரும் கயாதுவின் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் நடிகையாக உயர வேண்டும் என்ற கனவு கொண்ட இளம்பெண்ணாக அவர் நடிக்கிறாராம். இப்படம் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகிறது.


