News January 16, 2026
இந்தியாவில் விளையாட மறுப்பு: சமரசம் பேச களமிறங்கும் ICC

T20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியின் பங்கேற்பை உறுதிசெய்ய ICC முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் ICC குழு வங்கதேசத்திற்கு நேரடியாக சென்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு காரணமாக, இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச அணி, போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிய நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
Similar News
News January 26, 2026
தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்!

குடியரசு தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. TN-ல் மொத்தம் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாள்களில் மட்டுமே கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று நடைபெறும் கூட்டத்தில் கடந்த ஆண்டிற்கான வரவு, செலவு கணக்கு விவரங்களை கிராம சபை முன்பு வைத்து ஒப்புதல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 26, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தாா் விஜய்

நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் <<18953184>>தனியாக நின்று தவெக<<>> வெற்றிபெறும் என விஜய் கூறியிருந்தார். இதனால், தவெக தனித்து போட்டியா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் விஜய் தரப்புடன் புதிய தமிழகம், தேமுதிக, ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை சீட் விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை என்றால், தனித்தே போட்டியிடலாம் என கட்சியின் மூத்த தலைவர்களிடம் விஜய் சொல்லிவிட்டாராம்.
News January 26, 2026
டாய்லெட்டில் 10 நிமிடத்திற்கு மேல் இருக்கீங்களா? உஷார்!

இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கும், கழிப்பறை என்பது ரீல்ஸ் பார்க்கும் இடமாக மாறிவிட்டது. இப்படி நீண்ட நேரங்கள் கழிப்பறையில் இருப்பதால் மூல நோய், இடுப்பு தசை பலவீனம் உள்ளிட்ட பல உடல் பிரச்னைகள் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கழிவறையில் முட்டை வடிவ இருக்கையில் அதிகநேரம் அமரும்போது புவியீர்ப்பு விசையால் இடுப்பின் மீதான அழுத்தம் அதிகரித்து, குடல் சரிவுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர்.


