News April 16, 2025
இந்தியாவில் கிளர்ச்சி ஏற்படும்; ஆற்காடு பஞ்சாங்கத்தில் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தோப்புக்கான கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பெருவிழா நிறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது. புது வருடத்தில் விவசாயம் செழிக்கும், கால்நடைகள் உற்பத்தி அதிகரிக்கும், குழந்தைகளுக்கு வியாதிகள் ஏற்படும், நல்ல மழை பெய்யும், விலைவாசி உயர்வால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 29, 2026
ராணிப்பேட்டையில் உடனடி வேலை! SUPER CHANCE

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இங்கே <
News January 29, 2026
அரக்கோணத்தில் இருளில் மூழ்கிய மக்கள்!

ராணிப்பேட்டை; அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பேட்டை, பால கிருஷ்ணாபுரம், முசல் நாயுடு கண்டிகை, அரக்கோணம் நகர எல்லை பகுதிகளான ராகவேந்திரா நகர், நாகம்மாள் நகர், கைனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று(ஜன.28) மாலை மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரமாக அப்பகுதிகள் இருளில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
News January 29, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வேடல் – மின்னல் சாலை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேடல் காந்தி நகர் பகுதியில் 2 வாலிபர்களிடம் மடக்கி விசாரித்ததில், அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே நேதாஜி(29), கோடீஸ்வரன்(22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


