News August 10, 2025
இந்தியாவில் காசிக்கு அடுத்து தருமபுரியில் தான்!

தருமபுரி, அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். இந்தியாவில் காசிக்கு அடுத்து, தென் இந்தியாவில் காலபைரவருக்கென்று அமைந்துள்ள ஒரே தனிக்கோயில் இதுதான். அதியமான் மன்னன் போருக்குச் செல்லும் முன் தன் வாளை வைத்து இங்கு வழிபட்டதால், இன்றும் பைரவரின் திருக்கரங்களில் திரிசூலத்துடன் சேர்ந்து வாளும் இருப்பதைக் காணலாம். எதிரிகளின் தொல்லைகள் நீங்க, தடைகள் விலக இங்கே வழிபடலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 10, 2025
தருமபுரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருட்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க புதிய வழிகளை அறிவித்துள்ளார். 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 94981 10581 மற்றும் 63690 28922 ஆகிய வாட்ஸ்அப் எண்கள், மற்றும் ‘DRUG FREE TN’ என்ற மொபைல் செயலி மூலம் எந்த புகார்களை அளிக்கலாம். புகார் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
தருமபுரி மாவட்டத்தில் 23.380 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு

தருமபுரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், கஞ்சா தொடர்பாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 93.432 கிலோ கஞ்சா, ஒரு கார், 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 23.380 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.
News August 10, 2025
புதுமைப் பெண் திட்டத்தின் 33,663 மாணவர்கள் பயன்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 22,087 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 11,576 மாணவர்களும் என மொத்தம் 33,663 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ் தெரிவித்துள்ளார். 2025-2026-ஆம் கல்வியாண்டில் மட்டும் 76 கல்லூரிகளில் 11,554 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.