News November 7, 2025
இந்தியாவில் உலகத்தரத்திலான வங்கிகள்: நிதியமைச்சர்

கட்டமைப்பில் பெரிய, உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் இந்தியாவிற்கு தேவை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்காக வங்கிகள் மற்றும் RBI-யுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே தங்களது முதல் இலக்கு எனவும், கடந்த 10 ஆண்டுகளில் மூலதன செலவு 5 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய 26 பெண்கள் உள்பட 270 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மொத்தம் 465 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க நாளை விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு என அழைத்து செல்லப்பட்டு, சைபர் மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,500 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 7, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்!

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
News November 7, 2025
ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி: கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் 2026 தேர்தலில் கூட்டணி அமைப்போம் என கிருஷ்ணசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜன.7-ம் தேதி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமைச்சரவையில் பங்கேற்றால் தான் மக்களின் குறைகளை போக்க முடியும் என்றும், அதற்கான அரசியல் களத்தை அமைப்போம் எனவும் கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.


