News August 17, 2025
இந்தியாவிலேயே இராமநாதபுரத்தில் மட்டும் தான்.!

இராமநாதபுரம் தேவிபட்டினத்தில் அமைந்துள்ளது நவபாஷாண நவக்கிரகக் கோயில். இந்தியாவில் கடலுக்குள் அமைந்திருக்கும் ஒரே நவபாஷாண கோயில் இது தான். இராமன், இராவணனுடன் போரிடுவதற்கு முன், இந்த நவக்கிரகங்களை வழிபட்டதாகவும், நவபாஷாணங்களை கொண்டு நவக்கிரகங்களை நிறுவியதாகவும் நம்பப்படுகிறது. இங்கு வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். Share.
Similar News
News August 17, 2025
ராமநாதபுரம் அரசு ITI நிலையங்களில் நேரடி சேர்க்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, கடலாடி, பரமக்குடி, உத்திரகோசமங்கை மற்றும் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராணடு, இரண்டு ஆண்டு தொழில் படிப்பதற்கான நேரடி சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.750 உதவி தொகையும் லேப்டாப் மற்றும் மிதிவண்டியும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.
News August 17, 2025
இராமநாதபுரம்: வட்டாட்சியர் எண்கள்.. Save பண்ணுங்க.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
▶️கடலாடி – 04576-266558
▶️கமுதி – 04576-223235
▶️முதுகுளத்தூர் – 04576-222223
▶️பரமக்குடி – 04564-226223
▶️இராஜசிங்கமங்கலம் – 04561-299699
▶️திருவாடானை – 04561-254221
▶️கீழக்கரை – 04567-241255
▶️இராமேஸ்வரம் – 04573-221252
▶️இராமநாதபுரம் – 04567-220352
News August 17, 2025
இராமநாதபுரம்: டிக்கெட் ஓபன்.. ரெடியா இருங்க.!

இராமநாதபுரம் மக்களே.. தீபாவளி பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.17) துவங்குகிறது. அதன்படி, அக்.16ஆம் தேதிக்கான முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம். அக்.17ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறு நாளும் செய்து கொள்ளலாம். அதேபோல, அக்.19ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.20ஆம் தேதியும், தீபாவளி நாளான அக்.20ஆம் தேதிக்கான முன்பதிவை ஆக.21ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.