News January 11, 2026
இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டங்கள்: PM மோடி

சோமநாதர் ஆலய சுயமரியாதை விழாவில் பேசிய <<18826188>>PM மோடி<<>>, இந்த ஆலயம் 1,000 ஆண்டுகால அசைக்க முடியாத நம்பிக்கை என்று தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பின் ஆலயத்தை புனரமைக்க படேல் முயன்றபோது எதிர்த்த சக்திகள் சில, இன்றும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அந்த சக்திகள் இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக சதித்திட்டங்களை தீட்டி வருவதாக கூறிய அவர், அவற்றை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Similar News
News January 22, 2026
திருவாரூர்: வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டமானது, மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 22, 2026
NDA வெற்றிக் கூட்டணியாக மாறி வருகிறது: வானதி

தமிழகத்திற்கு PM மோடி வருகிறபோது கூடுகின்ற கூட்டம் என்பது TN-ன் ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுவதாக இருக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் CM வேட்பாளரான EPS வீட்டில் இன்று நடந்த காலை விருந்தில் அவர் பங்கேற்றார். அப்போது, ஒவ்வொரு நாளும் NDA கூட்டணிக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது என்றும், TN-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் வானதி தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

2026 தேர்தல் நெருங்கும் நிலையில், ஆட்சியில் உள்ள திமுக அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வெளியிட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.


