News December 16, 2025

இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்திய நாள்!

image

1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் அடையாளமாக, ஒவ்வொரு ஆண்டும் டிச.16-ம் தேதி விஜய் திவாஸ் தினம் (வெற்றி தினம்) அனுசரிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாக்., ராணுவ தளபதி ஜெனரல் ஆமிர் அப்துல்லா கானும், அவரது 93,000 படைவீரர்களும் சரணடைந்தனர். இந்த போர் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியை, தற்போதைய வங்கதேசமாக உருவாக வழிவகுத்தது.

Similar News

News December 19, 2025

BREAKING: செங்கோட்டையன் பாணியில் அடுத்த தலைவர்

image

பொதுவெளியில் கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதாகவும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் GK மணிக்கு அன்புமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு அவர் விளக்கம் அளித்தால் அன்புமணியை தலைவராக ஏற்பதுபோல் அமையும். இல்லை எனில் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது போல, GK மணி பாமகவிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2025

CINEMA 360°: 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞராக துருவ் தேர்வு

image

*கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. *நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு நேற்று பூஜை நடைபெற்றது. *துருவ் விக்ரம், 2025-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News December 19, 2025

அனுமன் ஜெயந்தியில் சொல்ல வேண்டிய மந்திரம்!

image

‘அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டுஅயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்’.
<<18609129>>இன்று <<>>இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். இதனால், மனதில் பயம் நீங்கி, வாழ்வில் வெற்றி கூடும் என நம்பப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!