News November 26, 2025

இந்தியாவின் முதல் தானியங்கி டிரோன் எதிர்ப்பு வாகனம்

image

ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திரஜால் நிறுவனம், நாட்டின் முதல் AI-ஆல் இயங்கும் தானியங்கி டிரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. எதிரிநாடுகளின் டிரோன்களை கண்காணித்து, தாக்கி அழிக்கும் வல்லமையை இது கொண்டுள்ளது. சமீபகாலமாக, பாகிஸ்தானில் இருந்து டிரோன் வழியாக ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தீர்வாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

கம்பீரின் Mind Voice இதுவா? நடிகர் சதீஷ் கிண்டல்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின் கம்பீருக்கு எதிரான Trolls அதிகரித்துவிட்டன. அந்த வரிசையில், கம்பீரின் Mind voice இப்போது எப்படி இருக்கும் என்கிற வகையில் நடிகர் சதீஷ் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதில் ‘எல்லாரும் ஓவரா பேசராங்க… பேசாம ஹர்சித் ராணாவ டெஸ்ட் கேப்டனாக அறிவிச்சு fun பண்ணுவோமா’ என்பதே கம்பீரின் Mind voice என குறிப்பிட்டுள்ளார். கம்பீருக்கு இப்படி ஒரு சோதனையா?

News November 27, 2025

பசுக்களுக்கும் Best Friends இருக்கு.. தெரியுமா?

image

மனிதர்களைப் போலவே பசுக்களுக்கும் சக மாடுகளுடன் நெருங்கிய நட்பு இருக்கிறது என நார்த்தாம்ப்டன் பல்கலை., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பசுவை அதன் Friend-யிடம் இருந்து பிரித்துவைக்கும் போது அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி, முரட்டுத் தனமாக நடக்கிறதாம். மீண்டும் அதன் Friend-வுடன் சேர்த்து வைக்கும்போது ஒருவித அமைதியை அவை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 27, 2025

5 நாள்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: அமுதா

image

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ‘டிட்வா’ புயலால் காற்று மற்றும் மழை அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் வரும் 30-ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!