News December 25, 2025
இந்தியாவின் முதல் அரசி: விஜய்

வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி தனது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தனது X பதிவில் விஜய், வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வெற்றி கண்டவர் வேலுநாச்சியார் என்றும், அவர் இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News December 31, 2025
கனவிலும் நீயே ரித்தி குமார்

ராஜா சாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரித்தி குமார், தனது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற சேலையில், கையில் ரோஜாவுடன் இருக்கும் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரித்தி, வெள்ளை நிறமே, விழியில் பாதி உள்ள நிறமே, கனவிலும் உந்தன் நிறமே என்று பாட வைக்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 31, 2025
கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகள்

உங்கள் கண் பார்வை கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சரியான ஊட்டச்சத்து தேவை. தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கண்கள் ஓயாமல் வேலை செய்கிறது. நவீன வாழ்க்கையில் இளம் வயதினர் பலரும் கண் பார்வை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கண்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 31, 2025
2026-ல் இந்தியா, பாக்., இடையே போர்?

2026-ல் IND, PAK இடையே மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக US-ஐ சேர்ந்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இது PAK-ல் அதிகரிக்கும் பயங்கரவாத செயல்களால் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரும், பதட்டம் நிலவுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இருநாடுகளும் ஆயுதக் குவிப்பை துரிதப்படுத்துவது கவலைக்குரிய விஷயம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


