News November 1, 2025
இந்தியாவின் பாகுபலி கவுன்டவுன் தொடங்கியது

இஸ்ரோவின் பாகுபலி என வர்ணிக்கப்படும் CMS-03 செயற்கைக்கோளுக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. நாளை மாலை 5:26-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. கடற்படை, ராணுவ பணிகளுக்காக இந்த இது பயன்படுத்தப்பட உள்ளது. 4,410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ₹1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறநாடுகளின் துணை இல்லாமல், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுவது இதுவே முதல்முறை.
Similar News
News November 2, 2025
IAS, IPS அதிகாரிகளின் மாநாடு ஒத்திவைப்பு

சென்னையில் வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற இருந்த IAS, IPS அதிகாரிகளின் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாநாடு நடத்தப்படும் தேதி, நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலவரம், திட்ட செயல்பாடுகள் குறித்து CM தலைமையில் மாநாடு நடைபெற இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மாநாடு நடைபெறுவது வழக்கம்.
News November 2, 2025
இந்த தாவரங்களுக்கு விதை தேவையில்லை

சில தாவரங்கள் வளர விதைகள் தேவையில்லை. வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் மூலம் வளர்கின்றன. இதுபோன்று விதைகள் இல்லாமல் வளரும் சில தாவரங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தாவரங்களுக்கு பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 2, 2025
ஆந்திரா கோயில் கூட்டநெரிசல் பலிக்கு இதுதான் காரணமா?

<<18168110>>ஆந்திராவில் கூட்டநெரிசல் <<>>ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்த கோயில், தனியாருக்கு சொந்தமானது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் செல்லவும், வெளியேறவும் ஒரே வழி மட்டும் இருந்ததும், ஒரே நேரத்தில் 25,000 பேர் கூடியதும் தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறியுள்ளது. மேலும், கூட்டத்திற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


