News February 1, 2026
இந்தியாவின் நாயகன் காலமானார். RIP

வெயில், மழை, பனி என அனைத்தையும் தாங்கிக் கொண்டு மக்களுக்காக எல்லையில் பணியாற்றிய ஒரு நாயகனை தாய்த்திரு நாடு இழந்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த 31 வயதே ஆன ராணுவ வீரர் ஜித்து பெஹெரா, காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். ஒடிசா CM மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து, சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அந்த வீரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News February 4, 2026
EPS என்ன CBI அதிகாரியா? செங்கோட்டையன்

கரூர் சம்பவத்தில் EPS குரல் கொடுக்கவில்லை என்றால் தவெக இல்லாமலேயே போயிருக்கும் என அதிமுகவினர் வைக்கும் விமர்சனத்துக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். EPS என்ன CBI உயரதிகாரியா என KAS கேள்வியெழுப்பியுள்ளார். தவெக கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என EPS பேசியதை குறிப்பிட்ட KAS, அதிமுகவினரே TVK கொடியை பிடித்துக்கொண்டு அன்று அவ்வாறு பேசியதாகவும் விமர்சித்துள்ளார்.
News February 4, 2026
தனித்து களம் காண்கிறாரா ராமதாஸ்?

தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க போட்டிபோடும் திமுக & அதிமுக, ராமதாஸை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படும் நிலையில், தனியாகவே களமிறங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். அத்துடன், தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அன்புமணி ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி அவரது தரப்பை தோற்கடிக்க ராமதாஸ் எண்ணுவதாக கூறப்படுகிறது.
News February 4, 2026
பிரேமலதாவின் கூட்டணி முடிவு.. அதிருப்தியில் தேமுதிக

திருவனந்தபுரத்தில் திமுகவிடம் பிரேமலதா, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 8 MLA + 1 ராஜ்யசபா MP பதவியை தேமுதிக கேட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், தேமுதிகவுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என பிரேமலதா அறிவித்தார். ஆனால், தேதியைச் சொல்லியும் அவர் முடிவை அறிவிக்காததால், அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளனராம்.


