News December 21, 2025
இந்தியாவின் எதிரிகளுடன் ராகுல் சந்திப்பு: பாஜக

ஜெர்மனி பயணத்தில் ராகுல் காந்தி ‘இந்தியாவின் எதிரிகளை’ சந்தித்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பேராசிரியர் கார்னிலியா வோல் என்பவருடன் ராகுல் இருக்கும் போட்டோவை வெளியிட்ட பாஜக, அவர் இந்தியாவிற்கு எதிராக சதி செய்யும் USA கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் பல்கலை.,யின் டிரஸ்ட்டி என தெரிவித்துள்ளது. ராகுலின் வெளிநாட்டு பயணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் BJP வலியுறுத்தியுள்ளது.
Similar News
News December 21, 2025
2025-ல் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

நேற்று தான் 2025 தொடங்கியது போல் இருந்தாலும், அதற்குள் 11 மாதங்கள் 21 நாள்கள் முடிந்துவிட்டன. இந்தாண்டு உங்களுக்கு இன்பம், துன்பம் என சகலமும் கலந்ததாக அமைந்திருக்கும். இதில் ஆராய வேண்டியது ஒன்றை மட்டுமே. உங்களை கடுமையாக பாதித்த விஷயமும், அதை நீங்கள் எதிர்கொண்டு மீண்ட விதமும். அப்படி ஆராய்ந்தால் தான், அதே விஷயத்தால் 2026-ல் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். 2025-ல் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
News December 21, 2025
மாநிறத்தில் இருப்பவர்கள் இந்த கலர் ஆடைகளை Try பண்ணுங்க

மாநிறத்தில் உள்ள ஆண்களே, எந்த நிறத்தில் உடை அணிந்தால் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கும் என தெரியவில்லையா? கவலைவேண்டாம். உங்களுக்கு, சந்தன நிறம், க்ரே, லைட் பிரவுன், ஹாஃப் ஒயிட், லைட் ப்ளூ, மெரூன் நிறம் என அத்தனை ஷேடுகளும் ஒத்துப்போகும். இந்த நிறங்களில் சட்டைகளை தேர்வு செய்து அதற்கு ஏற்றார் போல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் அவ்ளோதான், செம்ம ஸ்டைலிஷாக தோற்றமளிப்பீர்கள். SHARE.
News December 21, 2025
கிறிஸ்துமஸ் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

பள்ளிகளில் டிச.24 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. இதையொட்டியும், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டும் அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. டிச.23, 24, 25-ல் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு சுமார் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல, www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே! SHARE


