News December 24, 2025
இந்தியர்களின் ‘On site’ கனவுக்கு சிக்கல்

H1B விசா நடைமுறையில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த குலுக்கல் முறையை USA ரத்து செய்துள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் H1B விசா பெறுபவர்களில் 70% இந்தியர்களே; பிப்.27, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், குலுக்கல் முறையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நடுத்தர ஊழியர்களின் கனவை சிதைத்துள்ளது.
Similar News
News December 25, 2025
அதிகமா கேக் சாப்பிட்டா என்னாகும்னு தெரியுமா?

கிறிஸ்துமஸ் அன்று கேக் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் கேக்கை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள் *கேக்கில் உள்ள அதிக கார்போஹைட்ரேட், கலோரி உடல் எடையை அதிகரிக்கிறது *ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் *இதய நோய்களின் அபாயத்தை உயர்த்தலாம் *சில கேக்குகளில் உள்ள சுவையூட்டி, நிறமிகள் புற்றுநோயை கூட ஏற்படுத்தும் *அளவோடு கேக் சாப்பிட்டு, வெந்நீர் குடிப்பது நல்லது.
News December 25, 2025
கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையில் யார்?

1823-ல் கிளெமென்ட் கிளார்க் மூர் எழுதிய ‘A Visit from St. Nicholas’ கவிதை மூலமாகவே கிறிஸ்துமஸ் தாத்தா கான்செப்ட் உருவாகியுள்ளது. கவிதையில் பச்சை நிற ஆடை அணிந்து வந்து பரிசுகள் தரும் கேரக்டராகவே சாண்டா இருந்தார். ஆனால், நாளடைவில் சாண்டாவை விளம்பரங்களில் பயன்படுத்திய நிறுவனங்கள் அவரை பெரிதாகவும், சிவப்பு நிற ஆடை அணிந்திருப்பவராகவும் காட்டத் தொடங்கின. உங்கள் முன் சாண்டா தோன்றினால் என்ன கேட்பீங்க?
News December 25, 2025
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க குத்தகைகளுக்கு தடை

ஆரவல்லி மலைத்தொடரில் மொத்தமுள்ள 1.44 லட்சம் சதுர கி.மீட்டரில் 0.19% பகுதிகளில் சுரங்க பணிகளுக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், புதிய நிலையான சுரங்க திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, எந்தவொரு புதிய சுரங்க குத்தகைகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


