News March 6, 2025

இந்தியன் வங்கியில் திருட முயற்சி- 100 கிலோ தங்கம் தப்பியது 

image

திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று மாலை வங்கிப் பணிகள் முடிவடைந்து வங்கியின் மேலாளர் வங்கி மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது வங்கியின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.உடனடியாக வங்கி மேலாளர் வங்கி உள்ளே சென்று பார்த்தபோது பணம் நகைகள் ஏதும் திருடு போகவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று 14 காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டில் தக்காளி ரூ.20 பச்சை மிளகாய் 50 கொத்தவரங்காய் ரூ.35 வெண்டைக்காய் ரூபாய் 30 புடலங்காய் ரூபாய் 40 கத்தரிக்காய் ரூபாய் 40 அவரைக்காய் ரூபாய் 50 சுரைக்காய் ரூபாய் 20 பூசணி ரூபாய் 25 பரங்கி ரூபாய் 20 உருளைக்கிழங்கு ரூபாய் 30 சேப்பங்கிழங்கு ரூபாய் 40 முருங்கைக்காய் ரூபாய் 60 என விற்பனையாகிறது.

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி, நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் செப்டம்பர் 15 அன்று ‘தமிழோடு விளையாடு’ போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம். மாணவர்களைப் பங்கேற்கத் தயார் செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (13.9.2025 ) 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.

error: Content is protected !!