News August 18, 2024

இந்தியன் தாத்தா பாணியில் கோவை போலீஸ் 

image

கோவை மாநகர காவல்துறை ட்ரைக் பைக் என்ற புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதில் நின்றபடியே ஓட்டும் வசதி இருப்பதால் காவல்துறையினர் கூட்டம் நிறைந்த பகுதிகளில் எளிதில் ரோந்து பணியில் ஈடுபட முடியும். அண்மையில் இந்த வாகனத்தை ஓட்டி திட்டத்தை கோவை சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை எலக்ட்ரிக் பைக்கில் போலீசார் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

Similar News

News November 6, 2025

கோவை இளம் பெண்ணை இழிவு படுத்திய நபர் கைது!

image

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை கார்த்திக் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசியும் அவரை கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்டார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கார்த்திகை காவல்துறையினர் கைது செய்தனர்.

News November 6, 2025

கோவையில் பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி

image

சரவணம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் இரட்டை லாபம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தனர். பின் அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தென்காசி சென்று மோசடி செய்த ராஜு (41), முகமது அனீப் (44), அவருடைய மனைவி அன்னு (34) ஆகியோரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என கோவை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

News November 6, 2025

கோவை மாணவி வன்கொடுமை: 59 இடங்களில் தீவிர ரோந்து!

image

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கோவை மாநகரில் உள்ள 59 வெறிச்சோடிய இடங்களை போலீசார் அடையாளம் கண்டு கண்காணிப்பு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, மாலை மற்றும் இரவு நேரங்களில் இவ்விடங்களில் ரோந்து அதிகரிக்க, அதிகாரிகள் டார்ச், சைரன், தடியுடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!