News December 31, 2025

இதை தினமும் ஊறவச்சு சாப்பிடுங்க! ரொம்ப நல்லது!

image

உணவுகளில் ஒரு முக்கிய பருப்பு வகை பச்சைப்பயிறு. இதை தினமும் ஊற வைத்து சாப்பிட்டால், பல நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது *நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது *உடல் எடையை குறைக்க உதவுகிறது *பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்கள் அபாயத்தை தவிர்க்கிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *Folate சத்து நரம்பு மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.

Similar News

News January 3, 2026

யார் இந்த வேலுநாச்சியார்?

image

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாக 1730-ல் பிறந்தார். தனது கணவர் மறைவையடுத்து, ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கையை 1780-ல் மீட்டெடுத்தார். இதனால் இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என அழைக்கப்படுகிறார். 2008-ல் மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த வீரமங்கையை பெருமைப்படுத்தியது.

News January 3, 2026

டிமாண்டை மேலும் அதிகரித்த காங்கிரஸ்

image

திமுகவிடம் 38 சீட்களை கேட்பதோடு 3 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் டிமாண்ட் செய்வதாக தகவல் கசிந்துள்ளது. இதை கொடுத்தால் மட்டுமே கூட்டணி எனவும், குறைந்தபட்சம் வாய்வார்த்தையாக ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கேவை, ப.சிதம்பரம் கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக பேசப்படுவதால் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

News January 3, 2026

திருமணத்திற்கு முன் SEX வைத்தால் சிறை தண்டனை!

image

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் குற்றம் என்ற சட்டம் இந்தோனேசியாவில் அமலுக்கு வந்துள்ளது. 2023-ல் அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வாழ்ந்தால் 6 மாத சிறைத் தண்டனையும், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் 1 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ஆனால், இது ஒருவரின் தனியுரிமைகளை மீறுவதாக ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!