News January 11, 2026
இதை செய்யாவிட்டால் வங்கிக் கணக்கு முடங்கும்: SBI

ஜன.15-க்குள் KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் என SBI எச்சரித்துள்ளது. உடனே வங்கிக் கிளைக்கு சென்று உங்களுடைய KYC அப்டேட் செய்யப்பட்டுள்ளதா, ஆதார், பான் கார்டு உள்ளிட்டவை வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். வங்கிக் கணக்கு ஆக்டிவாக இருக்க, ஆண்டுக்கு ஒருமுறையாவது பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News February 6, 2026
பராசக்தி OTT ரிலீஸுக்கு தடை இல்லை!

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை என சென்னை HC தெரிவித்துள்ளது. அப்படத்தின் கதை தன்னுடையது என்று இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என்றும், பராசக்தி படக் கதை முழுவதும் சுதா கொங்கராவால் எழுதப்பட்டது எனவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
News February 6, 2026
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இடைஞ்சல்: உதயநிதி

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று DCM உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு என்கிற வார்த்தையே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும், மத்திய அரசு TN-ஐ பல வகைகளில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைக் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பே EPS பாராட்டு தெரிவித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News February 6, 2026
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஜன.28 அன்று அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, நாளை(பிப்.7 சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் விழாவிற்காக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, கரூர் வட்டத்திற்கும் நாளை வேலைநாளாகும். ஏனைய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைதான்.


