News February 13, 2026

இதை செய்தால், உங்களுக்கும் ₹1,000 கிடைக்கும்

image

உங்க FASTag-ல் ₹1,000 வேணுமா? ஒரு போட்டோ போதும்! தேசிய நெடுஞ்சாலைகளின் டோல் பிளாசாவில் அமைந்துள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால், அதை தெளிவாக போட்டோ எடுத்துக்கோங்க. அரசின் Rajmargyatra ஆப்பில், நீங்க எடுத்த போட்டோவை Upload செய்து, எந்த இடம், போட்டோ எடுக்கப்பட்ட நேரம் போன்றவற்றை குறிப்பிடவும். உண்மையில் அசுத்தமாக இருந்தால், சரிபார்ப்புக்கு பிறகு உங்களுடைய FASTag ₹1,000 Topup ஆகிவிடும்.

Similar News

News February 20, 2026

ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு வரவில்லை!

image

இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றத்திற்கு வராமல் அதிமுக MLA-க்கள் புறக்கணித்துள்ளனர். அதே போல பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு பாமக MLA-க்களும் அவை புறக்கணிப்பு செய்துள்ளனர். முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருமே இல்லாத நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் M.R.K.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருகின்றனர்.

News February 20, 2026

நடிகை மீனா 2-வது திருமணம் செய்கிறாரா?

image

தனக்கு 2-வது திருமணம் என பரப்பப்படும் வதந்திகள் தன்னை ரொம்பவே காயப்படுத்தும் என நடிகை மீனா வருத்தப்பட்டுள்ளார். தான் சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக தன்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய அவர், கேட்பதற்கு ஆள் இல்லைன்னு இப்படி பண்றீங்களா எனவும் கேட்டுள்ளார். 2022-ல் அவரது கணவர் வித்யாசாகர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 20, 2026

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தமா? தங்கம் தென்னரசு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்தவேண்டும் என யாராவது நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அந்த கொந்தளிப்பு இருக்கும் வரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்பது பொருள் எனக் கூறி, Ex CM அண்ணாதுரை பாணியில் அவர் பேசியுள்ளார். மேலும், CM-ஆக ஸ்டாலின் வந்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!