News November 20, 2025

இதைவிட மலிவான Skin care இருக்கவே முடியாது!

image

சருமம், முகம் அழகாக இருக்க எந்த கிரீம் பெஸ்ட்ன்னு குழப்பமா? இந்த ஒரு விஷயத்தை செய்தாலே, அதற்கு அவசியம் ஏற்படாது என்கின்றனர் டாக்டர்கள். தினம் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து *சருமம் பொலிவு பெறும் *வறட்சி நீங்கும் *பிம்பிள்ஸ் குறையும் *சுருங்கங்கள் விழாது. இளமையாக தெரிவீர்கள் *உடல் நச்சுகள் நீங்கி ஆரோக்கியமாகும். இதை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 22, 2025

பொய் கதைகளில் இருந்து தப்புவது கடினம்: ஜக்தீப் தன்கர்

image

துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, ஜக்தீப் தன்கர் பொதுவெளிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். தற்போது 4 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என்று தெரிவித்தார். முன்னதாக, பாஜக அவரை வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின..

News November 22, 2025

ஷூட்டிங்கில் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு

image

ஈத்தா பட ஷூட்டிங்கின்போது, பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நாஷிக்கில் நடைபெற்றுவந்த ஷூட்டிங்கின்போது அவருக்கும் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமடைந்த பிறகே மீண்டும் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.

News November 22, 2025

இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்: எந்த ஹீரோயினுக்கு தெரியுமா?

image

இந்த தலைமுறை ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம். நட்சத்திர நடிகையாக இருந்தாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களே ரிலீஸ் ஆகும். அப்படியிருக்க இந்த ஆண்டில் 7-வது படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். டிராகன், பைசன், தி பெட் டிடெக்டிவ், ஜானகி, கிஷ்கிந்தாபுரி, பரதா என 6 படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளிவந்துள்ள நிலையில், 7-வது படமான ‘லாக் டவுன்’ டிச.5-ல் வெளியாகிறது.

error: Content is protected !!