News April 9, 2026
இது தென்மாநில குரல்களை நெரிக்கும் செயல்: ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முடிவால் மக்களின் வரிப்பணம் வீணாகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பாஜக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும் என்றும் அவர் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற முக்கிய நடவடிக்கையை தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News April 13, 2026
தேமுதிகவுக்கு சக்திக்கு மீறி ஆசை: ராஜேந்திர பாலாஜி

தேமுதிகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற EPS முடிவில் நியாயம் உள்ளதாக ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தேமுதிகவை கூட்டணியில் தக்கவைக்க EPS தவறிவிட்டார் என்ற கருத்துக்கு பதிலளித்த அவர், தேமுதிக சக்திக்கு மீறி தொகுதிகளை எதிர்பார்த்தது; அதை பூர்த்தி செய்ய அதிமுக தயாராக இல்லை என்றார். மேலும், திமுகவுடன் இணைந்திருக்கும் தேமுதிகவின் முடிவு அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

ராமதாஸ் உடல்நிலை.. புதிய தகவல் வெளியானது!

சேலத்தில் நேற்று தேர்தல் பரப்புரைக்கு இடையே <<19633648>>ராமதாஸ் மயங்கி விழுந்தார்<<>>. அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்ற கட்சி நிர்வாகிகள் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சேர்த்தனர். ரத்த அழுத்த குறைவு காரணமாக மயக்கமடைந்ததாகவும் சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ஓரிரு நாள்கள் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.