News October 31, 2025
இது என்ன ஊரு? வினோதமா இருக்கே

போலந்து நாட்டில் உள்ள சுவோசோவா என்று ஊரில், 6 ஆயிரம் குடும்பங்கள் ஒரே தெருவில் வசிக்கின்றனர். இந்த தெரு சுமார் 9 கி.மீ தூரம் கொண்டது. ‘ஒரே தெரு’ என்ற வடிவமைப்பில் இந்த ஊர் பிரபலமாகி உள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு, இயற்கை சூழல், விவசாயத்துடன் இணைந்த வாழ்க்கை மூலம் அழகான சிறிய ஊர் என்பதைக் காட்டுகிறது. இதன் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
தோனி தொடர்ந்த வழக்கு: Ex IPS மனு மீண்டும் தள்ளுபடி

IPL சூதாட்டம் பற்றி விசாரித்த Ex IPS அதிகாரி சம்பத் குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக TV நிகழ்ச்சியில் கூறினார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை HC-ல் தோனி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி IPS அதிகாரி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
News November 1, 2025
Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம்: கர்னல்

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
News November 1, 2025
தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

*உங்கள் ஆழ்மனதுக்கு ஒரு கோரிக்கை விடுக்காமல், ஒருபோதும் தூங்கச் செல்லாதீர்கள்.
*தைரியமாக இருங்கள், நம்பிக்கை வைத்திருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.
*இங்கே எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது, அதை கண்டுபிடியுங்கள்.
*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்தலாகும்.
*ஒரு ஆணின் சிறந்த நண்பர், ஒரு நல்ல மனைவி. 


