News February 27, 2026
இது எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கு!

‘Ctrl+V, Ctrl+C’ அடித்து கொண்டிருப்பவர்களுக்கு, கார்பன் காப்பி பேப்பர் அருமை தெரியாது. 2 பேப்பர்களுக்கு நடுவே இதை வைத்து எழுதினால், ஒரே நேரத்தில் கீழே வைத்திருந்த காகிதத்திலும் அதே எழுத்து மாயமாக தோன்றும். பிரிண்டர், இல்லாத காலத்தில், இதுதான் அனைத்து ஆபீசிலும் நிறைந்திருந்தன. ஸ்கூல் நாள்களில், நண்பனின் நோட்ஸை அப்படியே காப்பி அடிக்கவும் உதவி இருக்கிறது. இதை எத்தனை பேர் யூஸ் பண்ணியிருக்கீங்க?
Similar News
News March 1, 2026
சூழ்ச்சிகளை அறிவால் முறியடிக்க வேண்டும்: ஸ்டாலின்

தமிழனத்தின் லட்சியப் பயணத்தில் நம் கால்கள் பாதை மாறக்கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும் எனக் கூறிய அவர், இளமை முதல் 73-ம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
கமேனியை கொன்றதற்காக பழி வாங்குவோம்: ஈரான்

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், கமேனியை கொன்றதற்கு பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சபதம் எடுத்துள்ளது. கொடுங்கோலர்களுக்கு எதிரான ஒரு பெரிய எழுச்சிக்கான தொடக்கமாக கமேனியின் கொலை இருக்கும் என்றும் கொமேனி மறைவுக்கு ஈரானில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
News March 1, 2026
மனைவியால் விஜய்க்கு இப்படியொரு நிலையா?

ஆட்சியில் பங்கு மற்றும் 40+1 தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுத்த அதே நேரத்தில், தவெகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இதற்கிடையில் விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு வழக்குத் தொடுத்தார். இந்த செய்தி வெளியான பின்னரே தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கிய <<19261440>>காங்.,<<>> திமுகவுடனும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியதாம்.


