News January 5, 2026

இது இனி உங்க தலையிலும் ஒட்டியிருக்கலாம்!

image

Zomato CEO தீபிந்தர், தலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கருவியின் பெயர் ‘Temple’. டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ள இது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகவும், ஒரே வேகத்திலும் உள்ளதா என்பதை கண்காணிக்கிறதாம். மேலும், இதன் மூலம் நரம்பியல் ஆரோக்கியம், மூளையின் செயல்திறனை கவனிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு வந்தால், இது வருங்காலத்தில் அனைவரின் தலையில் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.

Similar News

News January 6, 2026

ரோடு ஷோ.. நெறிமுறைகள் அரசாணை வெளியீடு

image

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் & ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இடத்தில் கூட்டம் நடத்த 10-21 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்கவும், 50,000 பேர் பங்கேற்பதாக இருந்தால் 30 நாள்களுக்கு முன்பு அனுமதி கோர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவுக்கு வழித்தடம், தொடக்கம் & முடிவிடத்தை விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 6, 2026

பழம்பெரும் நடிகர் சுரேஷ் குமார் காலமானார்

image

பழம்பெரும் நடிகர் சுரேஷ் குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தெலுங்கு சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள அவர், கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், இந்தியிலும் அமிதாப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் படம் மட்டுமின்றி பல ஆர்ட் படங்களிலும் கலக்கிய அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 6, 2026

குழந்தைகளுக்கு தேன் கொடுக்காதீங்க.. ஆபத்து!

image

தேன் சாப்பிடுவது நல்லது என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அதை கொடுக்கக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வயதில் குழந்தைகளின் செரிமான அமைப்பு முழு வளர்ச்சியடையாததால், தேனை அவர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது. மேலும், Clostridium என்ற பாக்டீரியா அதில் இருப்பதால் மலச்சிக்கல் தொடங்கி தசை பலவீனம் எனப் பல பிரச்னைகள் ஏற்படலாம். SHARE.

error: Content is protected !!