News January 20, 2026

இதுதான் உங்க சாதனையா CM? EPS

image

வேளச்சேரியில் டெலிவரி ஊழியர் <<18900464>>கொலைவெறி தாக்குதலுக்கு<<>> ஆளான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் என கேட்ட அவர், நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து எதை எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது என்றார். மேலும், மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா CM எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News January 30, 2026

ஆத்தூர்: ரூ.10 லட்சம் வழங்கிய அமைச்சர்

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வனப்பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக காட்டுமாடு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, முருகனின் மனைவி ராக்கம்மாளிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

News January 30, 2026

தொகுதி மாறும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

image

புதுச்சேரி CM ரங்கசாமி இம்முறையும் 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 2011-ல் இந்திராநகர், கதிர்​காமம் தொகு​தி​களில் வென்ற அவர், 2016-ல் ஒரு தொகுதியில் மட்​டும் போட்​டி​யிட்டு எதிர்க்கட்சி தலை​வ​ரா​னார். இதனால் சென்டிமென்டாக, 2021-ல் தட்டாஞ்சாவடி, ஏனாம் என மீண்டும் 2 தொகுதி​களில் போட்​டி​யிட்​டார். இம்முறையும்​ மங்கலம், கதிர்​காமம் தொகுதிகளில் போட்​டி​யிட அவர் திட்டமிட்டுள்ளாராம்.

News January 30, 2026

மீண்டும் 16,000 பேரை நீக்கிய அமேசான்

image

US, UK, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 16,000 பேரை அந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்தில் இருந்து அதிகபடியான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவும் அமேசான் முன்வந்துள்ளது. ஆட்குறைப்பு ஒருபக்கம் நடக்க மறுபுறம் பல ஆயிரம் கோடிகளை AI நிறுவனங்களில் அமேசான் செய்து வருகிறது.

error: Content is protected !!