News February 4, 2026
இதுதான் இந்தியாவின் சாக்லேட் டவுன்!

நீலகிரி மலைத்தொடரின் அழகான மலை நகரமான ஊட்டிதான் இந்தியாவின் ‘சாக்லேட் டவுன்’ என்று உங்களுக்கு தெரியுமா? ஊட்டியில் நீண்ட காலமாக வீடுகளில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் பிரபலமடைய, சுற்றுலா வளர்ச்சியும் ஓர் முக்கிய காரணமாகும். ஊட்டியின் குளிர்ந்த காலநிலை, சாக்லேட் தயாரிப்பிற்கு உகந்ததாக இருப்பதால், சாக்லேட்களுக்கு சிறந்த ருசி மற்றும் மென்மை கிடைக்கிறது. இங்கு பல்வேறு வகை சாக்லேட்டுகள் கிடைக்கின்றன.
Similar News
News February 17, 2026
திமுக கூட்டணியில் வெட்டு, குத்து நடக்கிறது: செல்லூர் ராஜு

திமுக கூட்டணியின் முக்கிய அங்கமான காங்கிரஸ் இப்போது போர் குரல் எழுப்பியுள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி முழு வடிவம் பெற்றுள்ள நிலையில், திமுக கூட்டணியில் வெட்டு, குத்து நிலவி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். பொதுவாகவே திமுக, அதன் கூட்டணி கட்சிகளை மதிப்பதில்லை எனவும் அதற்கு திருமாவளவனே சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. உடனே இதை செய்யுங்க

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <
News February 17, 2026
தவெக தேர்தல் அறிக்கை ரெடி.. 27-ம் தேதி வெளியிட திட்டம்

2026 தேர்தல் நெருங்குவதால் மக்களின் பார்வையை தவெக பக்கம் திரும்ப விஜய் தீவிரமாக திட்டம் வகுத்து வருகிறாராம். அதன்படி வரும் பிப். 27-ம் தேதி தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலவசங்களை தவிர்த்து, மக்களை கவரும் அம்சங்களுடன் அறிக்கை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுகவின் இலவசங்கள் முன் TVK தேர்தல் அறிக்கை தாக்கு பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


