News February 4, 2026
இதய ஆரோக்கியத்திற்கு இதை பண்ணுங்க!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த 6 தினமும் பின்பற்ற டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். *காலையில் வெதுவெதுப்பான சூட்டில் தண்ணீர் குடிக்கவும் *சர்க்கரை குறைவான புரத உணவை காலையில் சாப்பிடவும் *5 நிமிடங்களுக்கு தியானம் செய்யவும் *சூரிய வெளிச்சத்தில் 15 நிமிடங்களுக்கு நடக்கவும் *30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடவும் *காலையில் எழுந்த பிறகு 30 நிமிடங்களுக்கு செல்போன் பயன்பாட்டை தவிர்க்கவும்.
Similar News
News February 4, 2026
2026 தேர்தல்.. ரூட்டை மாற்றிய விஜய்

பிப்ரவரி 2-வது வாரத்தில் வேலூர் அகரம்சேரியில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால், போலீஸ் அனுமதி தராத காரணத்தால் விஜய்யின் பிரசார பயணம் மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப்.13-ம் தேதி, சேலம் மகுடஞ்சாவடியில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி போலீசில் தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $190 (இந்திய மதிப்பில் ₹17,180) உயர்ந்து $4,990-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 4, 2026
H.ராஜா உடல்நிலை.. முக்கிய அப்டேட்

பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். நல்ல முறையில் H.ராஜாவின் உடல்நலன் முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த நயினார், வெகுவிரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அவர் மக்கள் பணிக்கு திரும்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.


