News June 1, 2024
இதயமே இல்லாத உயிரினங்கள்

கடலில் வாழும் சில உயிரினங்களுக்கு, இதயம் இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், ஜெல்லி மீன், ஸ்டார் மீன், கடற்பாசி, பவளம், கடல் வெள்ளரிக்காய், தட்டைப் புழுக்கள் போன்றவற்றிற்கு இதயம் கிடையாது. அதேபோல், ‘ஆக்டோபஸ்’ எனப்படும் கணவாய் மீனுக்கு 3 இதயங்களும், ‘ஹாக்’ எனப்படும் கடலுக்கு அடியில் வாழும் மீனுக்கு 4 இதயங்களும், திமிங்கிலம் சுமார் 400 கிராம் எடை கொண்ட இதயத்தையும் கொண்டிருக்கின்றன.
Similar News
News September 19, 2025
முற்றிலும் டிஜிட்டலுக்கு மாறும் நிலப்பதிவு முறை

கிராம, நகர்புற பகுதிகளில் நிலங்களுக்கான உரிமைகளை தெளிவாக வரையறுக்கும் வகையில் புதிய மின்னணு தரவு தளத்தை மத்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. குறிப்பிட்ட நிலம் தொடர்பான A – Z தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்படுகிறதாம். இதனால் நிலம் தொடர்பான பல சட்ட சிக்கல்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. 99.8% பதிவுகள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதாம்.
News September 19, 2025
RoboShankar வீட்டில் நடக்க இருந்த விசேஷம்; கடைசி நேரத்தில்..

மகள் இந்திரஜாவின் மகனும், தன்னுடைய பேரனுமான நட்சத்திரனுக்கு நாளை மறுதினம் காதுகுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் ரோபோ ஷங்கர். ஆனால், அது நடக்கும் முன்பே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், பேரனின் காதுகுத்து நிகழ்வை பார்க்கும் கொடுப்பினை கூட அவருக்கு இல்லாமல் போய்விட்டதே என குடும்பத்தார் வருந்துகின்றனர்.
News September 19, 2025
ராகுலின் வியூகம் பிஹாரில் பலிக்குமா?

பிஹார் தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுலின் வாக்கு திருட்டு பிரசாரம் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை சிறப்பு தீவிர திருத்த வழக்கில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அது ராகுலுக்கு கைகொடுக்கலாம். அதேபோல் ராகுலின் வாக்கு திருட்டு பிரசாரம் மக்கள் ஆதரவை பெற்றால், தேர்தலும் சாதகமாகலாம். இல்லையென்றால் நிதிஷின் அறிவிப்புகளே மக்களை கவர அதிக வாய்ப்புள்ளது.