News December 11, 2025
இண்டிகோ பயணிகளுக்கு ₹10,000 வவுச்சர்

தங்களது விமான சேவை ரத்தால் (டிச.3, 4, 5 ஆகிய தேதிகளில்) பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிராவல் வவுச்சர் வழங்கப்படும் என Indigo அறிவித்துள்ளது. தலா ₹10,000 மதிப்பிலான அந்த டிராவல் வவுச்சரை அடுத்த 12 மாதம் வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விதிகளின்படி, விமானம் புறப்படவிருந்த 24 மணி நேரத்திற்குள் சேவை ரத்தானால், இழப்பீடாக ₹5,000 முதல் ₹10,000 வரை தரப்படும் என இண்டிகோ கூறியிருந்தது.
Similar News
News December 16, 2025
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் சார்ஜ் ஷீட் தாக்கல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜம்மு சிறப்பு கோர்ட்டில் NIA தாக்கல் செய்தது. 1597 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு மற்றும் அதன் நிழல் அமைப்பான எதிப்பு முன்னணி உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
News December 16, 2025
வரலாற்றில் இன்று

*1770–இசைமேதை பீத்தோவன் பிறந்தநாள்.
*1928 – சென்னை மாகாண முதல் CM பனகல் அரசர் நினைவு நாள்.
*1971 – போரில் இந்தியா ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர்.
*1971 – பிரிட்டனிடம் இருந்து பஹ்ரைன் அரசு விடுதலை பெற்றது.
*1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.
News December 16, 2025
IPL மினி ஏலத்தின் பட்டியலில் கடைசி நேரத்தில் டுவிஸ்ட்

IPL-ன் மினி ஏலம் அபுதாபியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் உள்பட 19 வீரர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து ஏலத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 369-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேரை மட்டும் IPL அணிகளால் எடுக்க முடியும். CSK(43) மற்றும் KKR (64) அதிக தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகின்றன.


