News January 17, 2026

இண்டிகோ நிறுவனத்திற்கு ₹22.20 கோடி அபராதம்!

image

கடந்த மாதம் சுமார் 2,500 விமானங்களை ரத்து செய்து ஏற்படுத்திய இடையூறுகளுக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு ₹22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்திய நிலையில், தற்போது அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கால அமைப்பு ரீதியான திருத்தங்களை உறுதி செய்வதற்காக, இண்டிகோ நிறுவனம் ₹50 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News January 31, 2026

தேசிய ஊடகத்திற்கு விஜய்யின் முதல் பேட்டி!

image

சென்னையில் NDTV TN கருத்தரங்கில் CM, EPS உள்ளிட்டோர் பங்கேற்ற நடைபெற்ற நிலையில், அச்செய்தி நிறுவன ஊடகவியலாளர்களை பனையூருக்கு அழைத்து விஜய் பேட்டி அளித்துள்ளார். தேசிய ஊடகத்திற்கான தனது முதல் பேட்டி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய், ஜன நாயகன் சென்சார், கரூர் சம்பவம் குறித்து கடும் வேதனை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது எதிர்காலம் இனி அரசியல் தான் என்றும் அவர் உறுதி செய்துள்ளாராம்.

News January 31, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 597 ▶குறள்: சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. ▶பொருள்: உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

News January 31, 2026

துணை முதல்வராக பதவி ஏற்கிறார் அஜித் பவார் மனைவி!

image

அஜித் பவார் மரணத்தையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மாலை 5 மணியளவில் அவர் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

error: Content is protected !!