News February 26, 2026

இட்லி மாவை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்?

image

ஒரு வாரத்திற்கு தேவையான மாவை ஆட்டி ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிப்பது பல உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாவை ஃபிரிட்ஜில் நீண்ட நாள்களுக்கு வைத்தால் அதிகம் புளித்துபோகும். இதனால் வாயு தொல்லை, வயிற்று தொந்தரவுகள், நெஞ்சு எரிச்சல், உப்புசம், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாமாம். அதிகபட்சமாக, மாவை 2 நாள்களுக்கு மேல் ஃபிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தக்கூடாதாம்.

Similar News

News February 26, 2026

விசிலுடன் ஸ்டேடியத்திற்கு வராதீங்க: TNCA

image

IND Vs ZIM சூப்பர் 8 சுற்று போட்டி இன்று இரவு 7 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், லீக் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் சூப்பர் 8 சுற்றுக்கும் தொடர்வதாக TNCA தெரிவித்துள்ளது. விசில், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட 18 பொருள்களை எடுத்துவர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் மீறும் பட்சத்தில், பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2026

அதிமுகவுடன் கூட்டணி.. புதிய அறிவிப்பு வெளியானது

image

தேர்தலையொட்டி, சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் நாடார் பாதுகாப்பு பேரவை இணைந்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள், சென்னையில் இன்று EPS-ஐ சந்தித்தனர். தொடர்ந்து, வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

News February 26, 2026

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை ஏன்?

image

மறைந்த <<19244680>>நல்லகண்ணுவுக்கு 72 குண்டுகள் முழங்க<<>> முழு அரசு மரியாதை இன்று செய்யப்பட்டது. பொதுவாக PM, CM என அரசியலில் முக்கிய பதவிகள் வகித்தவர்களுக்கு ராணுவ முறைப்படி 21 குண்டுகள் முழங்குவது வழக்கம். அதேசமயம் நாட்டின் உயரிய கலைஞர்கள் மற்றும் பதவி வகிக்காத அரசியல் தலைவர்களுக்கு தனிப்பட்ட சிறப்பு மரியாதை அளிக்கும் விதமாக 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையை காவல்துறை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!