News October 23, 2025

இடி, மின்னல் நேரங்களில் செல்போனில் பேசக்கூடாது!

image

நாமக்கள்: பள்ளிப்பாளையம் பகுதிகளில் இடி, மின்னல் நேரங்களில் பொதுமக்கள் செல்போனில் பேசுவது தவிர்க்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், மின்சாரம் தடைபட்டால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களின் பாதுகாப்பே முதன்மை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்,” என மின்வாரிய உதவி பொறியாளர் சச்சிதானந்தம் தெரிவித்தார்.

Similar News

News October 23, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

image

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 29.10.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News October 23, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 423 மிமீ மழை பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 23-ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு: எருமப்பட்டி 20 மிமீ, குமாரபாளையம் 3.20 மிமீ, மங்களபுரம் 12.60 மிமீ, நாமக்கல் 90 மிமீ, பரமத்திவேலூர் 35 மிமீ, புதுச்சத்திரம் 17மிமீ, ராசிபுரம் 22 மிமீ, சேந்தமங்கலம் 61.20 மிமீ, திருச்செங்கோடு 18 மிமீ, ஆட்சியர் வளாகம் 19 மிமீ, கொல்லிமலை செம்மேடு 35 மிமீ என மொத்தம் 423 மிமீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 23, 2025

நாமக்கல்லுக்கு வருகை தரும் துணை முதலமைச்சர்!

image

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இன்று காலை சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேந்தமங்கலம் பகுதிக்கு இன்று மதியம் வருகை தர உள்ளார்.

error: Content is protected !!