News December 22, 2025

இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

image

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

Similar News

News December 22, 2025

எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் நீக்கம்: DCM உதயநிதி

image

TN-ல் எதிர்பார்த்ததை விட அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் 14 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர் என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் பேசியுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது பெயர் நீக்கப்பட்டிருந்தால் திமுக பாக முகவர்களை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

News December 22, 2025

இன்று மட்டும் ₹5,000 உயர்ந்தது.. ALL TIME RECORD

image

இதுவரை இல்லாத வகையில் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹231-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 உயர்ந்து ₹2,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்துள்ளது. வரும் நாள்களில் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News December 22, 2025

பணம் கொட்டக்கூடிய சேமிப்புகள் இதோ!

image

பணத்தை சேமிப்பது அவசியமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ரிஸ்க் இல்லாமல் வங்கியின் FD-யை விட அதிக வட்டியுடன் லாபம் தரக்கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் இதோ. செல்வ மகள் சேமிப்பு திட்டம்(8.2%), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(8.2%), தேசிய சேமிப்பு பத்திரம்(7.7%), கிசான் விகாஸ் பத்ரா(7.5%), அஞ்சலக நேர வைப்பு நிதி(7.5%), அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்(7.4%), பொது வருங்கால வைப்பு நிதி(7.1%).

error: Content is protected !!