News November 6, 2025
இசையமைப்பாளராக யாரு கரெக்ட்டா சாய்ஸ்?

ரத்தம், அதீத Violence இல்லாத ஒரு ரஜினி படம் 2027 பொங்கலுக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது. காமெடி, சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகப்போகும் ரஜினி- சுந்தர்.சி படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் ஹிப்ஹாப் தமிழாவை கொண்டுவந்தால், சூப்பராக இருக்கும் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க.. இந்த படத்துக்கு யார் கரெக்ட்டான இசையமைப்பாளராக இருப்பாங்க?
Similar News
News February 15, 2026
இன்று சிவராத்திரி.. இரவில் இதை செய்யாதீங்க

*இரவு மட்டுமல்ல, நாளை மாலை 6 மணி வரை தூங்கக்கூடாது.
*உணவில் வெங்காயம் & பூண்டு சேர்க்கக் கூடாது.
*பிறரிடம் கடுமையாக பேசக்கூடாது.
*விழித்திருக்க வேண்டும் என்பதற்காக டிவி பார்க்கவோ, போன் யூஸ் பண்ணவோ கூடாது.
*பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
*கருப்பு நிற ஆடைகளை தவிருங்கள்.
*எந்தவொரு தீய செயலும் செய்யக்கூடாது. *அசைவ உணவுகள், மது, சிகரெட்டை தொடக்கூடாது. SHARE
News February 15, 2026
குறைபாடுடைய குழந்தையை கொன்ற பெற்றோருக்கு ஆயுள்!

ஊனத்துடன் பிறந்த குழந்தையை பராமரிப்பது பெற்றோரின் கடமை என மதுரை HC கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சந்தித்த சிரமங்களை கருத்தில் கொண்டாலும், கொலை செய்வதற்கு சட்டம் அனுமதித்தால் அத்தகைய குழந்தைகள் உலகில் உயிர்வாழ முடியாது என கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், விஷம் கொடுத்து குழந்தையை கொன்ற பெற்றோருக்கு கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உத்தரவையும் கோர்ட் உறுதி செய்தது.
News February 15, 2026
FLASH: இந்தியா பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் சுற்று போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. உடல்நலக்குறைவால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத அபிஷேக் சர்மா பிளேயிங் 11-க்கு திரும்பியுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வென்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் யார் அதிக ரன் அடிப்பார்? உங்க கணிப்பை கமெண்ட்ல சொல்லுங்க


